கும்மிடிப்பூண்டி அருகேகுடிநீர் மேல்நிலைத் தொட்டி,பேருந்து நிறுத்தம் பூமி பூஜை

கும்மிடிப்பூண்டி அருகேகுடிநீர் மேல்நிலைத் தொட்டி,பேருந்து நிறுத்தம் பூமி பூஜை
X

ஜி.ஆர். கண்டிகை கிராமத்தில் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கு பூமி பூஜையை எம்எல்ஏ கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.

New Over Head Tank Bus Stop Boomi Pooja கும்மிடிப்பூண்டி அருகே புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி பேருந்து நிறுத்தத்திற்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்

New Over Head Tank Bus Stop Boomi Pooja

குருவராஜகண்டிகை ஊராட்சியில் புதிய குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் குருவராஜகண்டிகையில் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஜி.ஆர் கண்டிகை, சூறாவளி கண்டிகை, பில்லா குப்பம் என்ற பல்வேறு பகுதிகளில் பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுக் இதர பிரிவினர் மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு நீர்த்தேக்க தொட்டி வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி இடம் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட ஊராட்சி குழு நிதியில் ரூபாய் 18.லட்சம் மதிப்பில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது

தொடர்ந்து 18.லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஷ்வரி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் பங்கேற்று பூமி பூஜையை துவக்கி வைத்தார். இதில்ஊராட்சி மன்ற தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், சாரதம்மா முத்துசாமி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி முன் 6.5லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக பூமிபூஜை நிகழ்வு சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வுகளில் திமுக நிர்வாகிகள் யுகேந்திரன், ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, ஜெயந்தி கெஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பள்ளியில் ஆய்வு- தொடர்ந்து அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ .கோவிந்தராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள், சமையல் கூடம் அமைப்பது குறித்து தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேஷ், ஊாராட்சி தலைவர் ரவியிடம் ஆலோசனைகளை வழங்கினார்.


Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!