சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை!
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை கூட்டு சந்திப்பில் மூன்று மணி நேரமாக வாகனங்கள் அணிவகுத்து செல்கிறது. இதனால் கவரப்பேட்டையில் மூன்று நேரமாக வாகன நெரிசல் ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக கவரப்பேட்டை சர்விஸ் சாலையில் வாகனங்கள் மாற்றிவிடப்பட்டுள்ளது. அவ்வாறு சென்று வரக்கூடிய வாகனங்கள் சாலை சேதாரத்தின் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாக ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த ராட்சத பள்ளங்களின் விளைவால் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள் மூலம் வரக்கூடியவர்கள் இந்த பள்ளங்களில் தவறி விழுந்து சிறிதும் பெரிதுமாக அவ்வப்போது விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு பெய்த கனமழையால் சாலை சேதாரத்தின் காரணமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கவரப்பேட்டை கூட்டு சந்திப்பு அருகே சுமார்4 மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து செல்கிறது. இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் கவரப்பேட்டையில் இருந்து பனப்பாக்கம் வரை சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்று கொண்டிருக்கிறது.
இதனால் பள்ளி, கல்லூரிக்கு, செல்லும் மாணவர்கள் பணி நிமித்தமாக செல்லக்கூடியவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் பணிகளை விரைந்து முடிக்கவும் சர்வீஸ் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் நிற்கின்ற மழை நீரை அகற்றி சாலையை சீர் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை கொடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu