பழங்குடி இன மக்களுக்கு அன்னை தெரசா அறக்கட்டளை நிவாரணப் பொருட்கள் வழங்கல்
தம்பு நாயுடு பாளையம் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு அன்னை தெரசா அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் இளவரசி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், செங்கரை ஊராட்சிக்குட்பட்ட தம்பு நாயுடு பாளையம் பகுதியில் சுமார் 80 பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த மாதம் மழை காரணத்தினால் வாழ்வாதாரம் இழந்து சரி வரை வேலையில்லாத் திண்டாட்டத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு உதவிடும் வகையில் முன்னாள் ஓய்வு பெற்ற ஊத்துக்கோட்டை வட்டாட்சியரும் கண்ணிகைபேர் பகுதியில் இயங்கி வரும் அன்னை தெரசா கல்வி மருத்துவம், விளையாட்டு, சமூக அறக்கட்டளை தலைவருமான டாக்டர் இளவரசி அறக்கட்டளை சார்பில் பாதிக்கப்பட்ட 80.குடும்பங்களுக்கு 5.கிலோ அரிசி. காய் கனிகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து நலம் விசாரித்து பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் செங்கரை ஊராட்சி மன்ற தலைவர் டி.எஸ்.மோகன் குமார், அறக்கட்டளையின் செயலாளர் அழிஞ்சிவாக்கம்.எம.ரகு, பொருளாளர் பிரின்ஸ், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் எலிசபெத் வெங்கட், வார்டு உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மல்லிகா, ஹரி கிருஷ்ணன், சிராஜ், மணிகண்டன், கொலானுர் குமரேசன். ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொருட்களைப் பெற்றுக் கொண்ட பழங்குடியின மக்கள் கூறுகையில், டாக்டர் இளவரசி என்பவர் முன்னாாள் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ஆக பணிபுரிந்தபோது எங்கள் போன்று மக்களை தேடி வந்து அரசு சார்பில் வழங்கும் அனைத்து சலுகைகளை பெற்றுத்தந்தார்.
தற்போது ஓய்வு பெற்று கூட எஙகளை மறக்காமல் அவர்கள் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் நாள்தோறும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார். அவருக்கு எங்களுடைய இன மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu