பொன்னேரியில் ரயிலை மறித்து, 200க்கும் மேற்பட்ட பயணிகள் போராட்டம்

பொன்னேரியில் ரயிலை மறித்து, 200க்கும் மேற்பட்ட பயணிகள் போராட்டம்
X

பொன்னேரியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ரயில் பயணிகள்.

கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் குறித்த ரயில்கள் இயக்கப் படுவதில்லை என கூறி பொன்னேரியில் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை - கும்மிடிப்பூண்டி, சென்னை - சூலூர் பேட்டை மார்க்கமாக புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில், சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கமாக புறநகர் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படவில்லை என ரயில் பயணிகள் ஆத்திரமடைந்து கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி வரை செல்லும் புறநகர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கமாக செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. மேலும் தங்களுக்கு உரிய காரணம் அளிக்காமல் ரயில் நிர்வாகத்தினர் புறக்கணிப்பதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டி உரிய நேரத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் சூப்பர் பாஸ்ட் ரயிலையும் சென்னை கும்மிடிபூண்டி மார்க்கமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தின் காரணமாக விரைவு ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!