தேர்வுவழி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வு வழி கிராமத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார்.
தேர்வு வழி கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் பங்கேற்று திட்டத்தை துவக்கி வைத்து பொது மக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தேர்வு வழி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் அடங்கிய ரெட்டம்பேடு, வழதலம்பேடு, ஆத்துப்பாக்கம், மங்காவரம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை குறித்து மனுக்களை அதிகாரியிடம் வழங்கினார். சரி பார்க்கப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்களை எம் எல் ஏ கோவிந்தராஜன் வழங்கினார். இதில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அரசு துறை சார்ந்த 17 துறைகள் சார்பான கோரிக்கை குறித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.இதில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், மாவட்ட பொருளாளர் ரமேஷ், நகர செயலாளர்கள் அறிவழகன், ரவிக்குமார், மற்றும் காளரத்தி தேர்வழி ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜாகுமார், ரெட்டம் பேடு ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் குப்புசாமி, சங்கர் வழிதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலைசுகு ஆத்துப்பக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள்,மங்காவரம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu