ஆரம்பாக்கத்தில் மருத்துவ முகாமை துவக்கிவைத்த எம்எல்ஏ

ஆரம்பாக்கத்தில் மருத்துவ முகாமை துவக்கிவைத்த எம்எல்ஏ
X

கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மீனவர் அணி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மீனவர் அணி அமைப்பாளர் ஆறுமுகம் ஏற்பட்டில் இந்த கண் சிகிச்சை மருத்துவ நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், திமுக மாவட்ட பொருளாளர் ரமேஷ், கும்மிடிப்பூண்டி நகர திமுக செயலாளர் அறிவழகன், பேராட்சி துணைத் தலைவர் கேசவன், மாவட்ட கவுன்சிலர் சாரதம்மா முத்துசாமி, ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் மதுமிதா, டாக்டர் மார்வின் ,அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராமராஜ் தலைமையில் 16 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பார்வை தூர பார்வை கண்ணீர் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். 350 பேர் இந்த முகாமில் சிகிச்சை பெற்ற நிலையில், 18பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக சென்னை அரவிந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!