மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ
X

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன்,

ஊத்துக்கோட்டை அருகே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்.

ஊத்துக்கோட்டை வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினார்.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வந்தது இதில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட போந்தவாக்கம், கூனிப்பாளையம், திருக்கண்டலம், பாலவாக்கம், ஒதப்பை, ஆட்ரம்பாக்கம், குமரப்பேட்டை, தேவந்தவாக்கம், பெரிஞ்சேரி, மெய்யூர் உள்ளிட்ட 10 இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட ஆண், பெண், குழந்தைகள் என 472 பேரை முகாம்கள் தங்க வைத்துள்ளனர்.இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் மதன் ஆகியோர் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்துள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான காலை உணவு, பிரட், மதிய உணவு, பால், பிஸ்கட், போர்வை, பாய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான பி.ஜெ. மூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்திய வேலு, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி லோகேஷ், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன்,மோகன், திருக்கண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ், குமரப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் பாபு,தெற்கு ஒன்றிய பொருளாளர் குப்பன், நிர்வாகிகள் தியாகராஜன், திருக்கண்டலம் ஊராட்சி செயலர் உமாநாத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!