திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.
கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர் நாசர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாநில இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு கிளை நிர்வாக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கட்சி முன்னோடிகள் உள்ளிட்ட 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜ் தலைமை வகித்தார் மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.பி.சிவாஜி, மாநில அணியை சேர்ந்த கன்னிகை ஜி.ஸ்டாலின், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்புவாணன், மாவட்ட அவைத்தலைவர் பகலவன், எம்.எல்.ரவி, மாவட்டத்துணைச் செயலாளர் கதிரவன், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகுழுத் தலைவர் கே.விஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசையும், திமுக நிர்வாகிகள் 5000 பேருக்கு பேட்டி, சேலை, நாள்காட்டி, தையல் இயந்திரம். பொங்கல் பரிசு உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.வி. ராமமூர்த்தி, குணசேகரன், டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், வெங்கடாஜலபதி, ஒன்றிய, செயலாளர்கள் மு.மணிபாலன், டி.கே.சந்திரசேகர், எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ், ஆ.சத்தியவேலு, பா.சுகுமாரன், கி. வே.ஆனந்தகுமார், செல்வசேகரன், பொன்னுசாமி, பரிமளம், ரவிக்குமார், இரா.அறிவழகன், தமிழ் உதயன், மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சித்ராமுனுசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், வழக்கறிஞர்கள் தேவேந்திரன், வெற்றி என்கிற ராஜேஷ், உள்ளிப்பட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் வார்டு நிர்வாகிகள் பல்வேறு அணியின் சார்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu