சிப்காட்டில் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து:பொருட்கள் சேதம்

சிப்காட்டில் பழுது பார்க்கும் தொழிற்சாலையில்   திடீர் தீ விபத்து:பொருட்கள் சேதம்
X

குடோனில் இருந்த பொருட்கள் தீயில் எரியும் நிலை  

Mechanical Company Fire Accident கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் ஜேசிபி இயந்திரங்கள் பழுது பார்க்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்ச ரூபாய் பொருட்கள் தீயில் கருகிசேதமானது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள இன்ஃப்ரா இன்ஜினியர்ஸ் இந்தியா எனப்படும் கனரக இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணிமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பொருட்கள் எரிந்து சேதமானது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள இன்ஃப்ரா இன்ஜினியரிங் இந்தியா எனப்படும் தனியார் கனரக இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணிமனை அமைந்துள்ளது இந்த பணிமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தொழிற்சாலையில் ஜேசிபி,பொக்லைன் உள்ளிட்ட கனராக இயந்திரங்களை சர்வீஸ் செய்வது வழக்கம். இந்த நிலையில் திடீரென நேற்று மாலை அளவில் உணவகத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனை கண்காணிப்பதற்காக பணிமனை காவலர் சென்று பார்த்த போது பழைய மற்றும் புதிய பொருட்களை சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் குடோனில் புகை வருவதை கண்ட காவலர் உடன் பணி புரியும் பணிமனை காவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து

சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் திணறி வந்த நிலையில் வாகனத்தில் இருந்த தண்ணீர் தீர்ந்து போனதால் மீண்டும் தண்ணீரை நிரப்ப தீயணைப்பு வாகனம் திரும்பிச் சென்றதால் தீ அதிகாரித்துள்ளது. இதற்கிடையே தொழிற்சாலை சேகரிப்பு குடோனில் இருந்த பழைய மற்றும் புதிய பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலுமாக சேதம் ஆனது.

தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பணிமனை சுற்றிலும் முறைப்படுத்தப்படாத ஆயில் மற்றும் வீணான பொருட்கள் இருப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேகரிப்பு குடோனை சுற்றி ஜன்னலில் போடப்பட்டிருந்த கண்ணாடிகள் முற்றிலுமாக வெடித்து சிதறியதால் பணிமனைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த பணிமனையில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள் சேகரிப்பு குடோனில் உள்ள சிலிண்டர்கள், ஆயில் பேரல்கள், புதிய பொருட்கள் என அனைத்தையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஏ ட்ரிபிள் எக்ஸ் எனப்படும் அதிகப்படியான நுரையை வெளியேற்றி தீயை அணைக்க கூடிய திரவத்தைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனாலும் தீயை முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வர சுமார் 2.மணி நேரம் ஆனது. இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய போலீசார்மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் பணிமனை தொழிலாளர்கள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. மேலும் தீயைஅணைக்கும் முயற்சியில் சிப்காட் மற்றும் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் மிகவும் போராடி கொண்டு வந்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!