மஞ்சங்காரணையில் டீக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு: இருவர் கைது

மஞ்சங்காரணையில் டீக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு: இருவர் கைது
X

திருட்டு நடைபெற்ற தேநீர் கடை.

மஞ்சங்காரணையில் டீக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சங்காரணையில் ஸ்ரீதர் என்பவர் தேநீர் மற்றும் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.10000 பணம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஸ்ரீதர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் இருவர் கடைக்குள் புகுந்து கல்லா பெட்டியில் இருந்து பணத்தை திருடியது தெரிய வந்தது.

மேலும் கடைக்கு வெளியே மற்றொருவன் வாகனத்தை வைத்து கொண்டு தயாராக இருந்து இவர்களை அழைத்து சென்றுள்ளான். இந்த காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட சென்னை அயனாவரத்தை சேர்ந்த சரவணன் (18) மற்றும் 17வயது சிறுவன் இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 1000ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து இருவரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சரவணனை திருவள்ளூர் கிளை சிறையிலும், 17வயது சிறுவனை கெல்லீஸ் சிறார் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

Tags

Next Story