பெரியபாளையம் அருகே ஸ்ரீஅழகிய சுந்தரராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

பெரியபாளையம் அருகே ஸ்ரீஅழகிய சுந்தரராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்
X

கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அழகிய சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே ஸ்ரீ அழகிய சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அழகிய சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அழகிய சுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ அழகிய சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில்‌ ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த 2010-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த கோவிலை கிராம பொதுமக்கள் புதிப்பித்து இன்று காலை மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதை முன்னிட்டு கடந்த புதன்கிழமை மாலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று காலை மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.

இதன் பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மூலவர்,அம்பாள், விமான கோபுரங்கள்,பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் கும்பாபிஷேகத்தில் அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது பின்னர் மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னிகைப்பேர் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா