வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சூரப்பூண்டி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக, 1 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு வாக்கு பதிவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2021 ஆம் ஆண்டுக்கான சட்ட மன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதற்கான முன்ஏற்பாடுகள் நடைபெற்று அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, இன்று காலை தொடர்ந்து அதனை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். பின்னர் சூரப்பூண்டியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக வாக்கு பதிவானது நிறுத்தப்பட்டு, பின்னர் புதிய இயந்திரம் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!