நிறுத்தி வைத்திருந்த லாரியில் ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழப்பு
Lorry Driver Mystery Death
கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனை சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் டிரைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் குரலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனை சாவடி உள்ளது.இந்த சோதனை சாவடி வழியாக ஆந்திரா, தெலுங்கானா, பீகார், ஒரிசா, டெல்லி, ஜார்க்கண்ட், சிக்கிம், உத்தர பிரதேஷ், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு உணவு பொருட்கள், ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் பொருட்கள், காற்றாலை உற்பத்தி செய்யும் பொருட்கள், ராக்கெட் ஏவுதலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை லாரி மற்றும் கனரக வாகனங்களில் இரவு பகலாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் சென்னை கோயம்புத்தூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வருவதும் போதுமாக இருந்து வருகிறது.
சில நேரங்களில் சுமார் 500-1000 கிலோ மீட்டர் டிரைவிங் செய்த ஓட்டுநர்கள் எளாவூர் சோதனைச் சாவடி வளாகத்தில் உள்ள காலி இடத்தில் நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பது வழக்கம் இதனால் விபத்துகளும் குறையும் ஆனால் எளாவூர் ஒரு சோதனைச் சாவடிகளில் ஓய்வெடுக்கும் ஓட்டுனர்களுக்கு கட்டிடங்கள் இருந்தும் அதை திறக்கப்படாமல் லாரியிலேயே சாலை ஓரமாக படுத்து தூங்குவது சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த காசி ரெட்டி ( வயது 40). இவர் கனரக வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி இன்று அதிகாலை வந்துள்ளார்.
எளாவூர் வந்தவுடன் லாரியை ஓரங்கட்டி விட்டு காசி ரெட்டி ஓய்வெடுத்து சாய்ந்த படி உயிர் இழந்து உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக லாரி ஓட்டுநர்கள் .இது குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த லாரி ஓட்டுநர் காசிரெட்டியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மாரடைப்பால் உயிரிழந்தாரா, அல்லது பணத்திற்காக யாராவது தலையணையால் அழுத்தி கொலை செய்யப்பட்டாரா, இல்லையென்றால் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் எளாவூர் சோதனைச் சாவடியில் மற்ற லாரி ஓட்டுநர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஓட்டுனர்கள் கூறுகையில் எளாவூர் சோதனைச் சாவடி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சோதனை சாவடிக்காக தமிழக அரசு சுமார் 100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பல வசதிகளும் கூடிய கட்டிடங்கள் ஹோட்டல்கள் ஓய்வறைகள், கழிவறை உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் கட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதனால் வரை அந்தக் கட்டிடங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் அரசு வழங்கிய மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. எனவே மேற்கண்ட கட்டிடங்களை திறக்க வேண்டும் என ஓட்டுநர்கள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இந்த பிரச்னை குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நடவடிக்கை எடுப்பாரா?.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu