வட்டாட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை மூட கோரி மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புது கும்மிடிபூண்டியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரும்பு புகையால் மற்றும் கருப்பு துகள்கள் காற்றில் பறந்து வீடுகள் மற்றும் குடி தண்ணீரில் கலக்கிறது
இந்த காற்றை சுவாசிப்பதால் பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. மேலும் புது கும்மிடிபூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டா ராமாச்சேரி பகுதியில் பழைய டயர்கள் அறுத்து அவற்றை சின்ன தூள்கள் ஆக்கி அதில் பவுடர் மட்டும் ரசாயன எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் இருந்து அடிக்கடி துகள்கள் வெளியேறி பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு மூச்சு திணறல் சுவாச சம்பந்தப்பட்ட பல்வேறு தொற்று நோய்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு தொழிற்சாலை முன்பு ஒன்று கூடி தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தொழிற்சாலையை தற்காலிகமாக 10 நாட்களுக்கு மூடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மீண்டும் தொழிற்சாலை செயல்பட்ட நிலையில். அதிலிருந்து கருப்பு துகள்கள் காற்றில் வெளியேறிய காரணத்தினால் மூச்சுத் திணறல் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 75க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்கு வந்த அதிகாரிகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை அடுத்து பகுதி மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu