ஊத்துக்கோட்டை குயவன் குளம் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்குமா?
கிடப்பில் போடப்பட்ட குயவன்குளம் சீரமைப்புப்பணிகள்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 15000 மக்கள் வசித்து வருகின்றனர் இங்கு காமராஜர் நகர் பகுதியில் ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில் அருகே குயவன் குளம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குளத்தில் உள்ள நீரை நம்பித்தான் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வந்தனர்.
காலப்போக்கில் குளத்தை சீரமைக்காமல் விட்டதால், நாணல்கள் வளர்ந்து தண்ணீர் மாசடைந்தது. மேலும் குளத்தில் சுற்றி உள்ள குடியிருப்புகளிலிருந்து பைப்கள் மூலம் வெளியேறும் கழிவு நீர் குளத்தில் கலக்கிறது
இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது எனவே இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் குளத்தை சீரமைக்க கடந்த ஓராண்டுக்கு முன்பு சுமார் 10 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் அமைக்க பூமி பூஜையும் நடைபெற்றது. பின்னர் சுற்றுச்சுவர் கட்ட கான்கிரீட் தூண்கள் அமைக்க கம்பிகள் அமைக்கப்பட்டு ஆரம்ப கட்டத்திலேயே பணிகள் நிறுத்தப்பட்டன.
அதன்பிறகு இன்று வரை சீரமைக்கும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில் சுற்றுச்சூழல் அமைக்க கான்கிரீட் தூண்களை அமைக்கும் பணிக்கான கம்பிகள் நிறுத்தப்பட்டு அந்தப் பணிகள் ஆரம்பத்திலேயே கிடப்பில் போடப்பட்டதால், கம்பிகள் துருப்பிடித்து அரசு பணம் வீணாகி வருகிறது. மேலும் குளத்தை ஒட்டி சுற்றுச்சுவர் இல்லாததால் தங்களின் குழந்தைகள் விளையாடும் போது அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்
எனவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு குளத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu