நகை கடன் தள்ளுபடி வழங்கும் நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்குவாதம்

நகை கடன் தள்ளுபடி வழங்கும் நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்குவாதம்
X

வாக்குவாதத்தில் ஈடுபட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள். 

பெரியபாளையம் அருகே நகை கடன் தள்ளுபடி வழங்கும் நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைக்கவில்லை என கூறி வாக்குவாதம்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சியில் நகை கடன் தள்ளுபடியில் உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி கூட்டுறவு கடன் சங்கத்தில் 5சவரனுக்கு கீழ் நகை கடன் பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் நகைகள் திரும்ப ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரணி பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வசேகரன், நகர செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கூட்டுறவு சங்கத்தில் பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கினர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பேரூராட்சி துணை தலைவர் சுகுமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைக்காமல் திமுக நிர்வாகிகளை மட்டுமே வைத்து நிகழ்ச்சியை நடத்துவதா என கேள்வி எழுப்பினர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருக்கலாமா என அப்போது வினவினர். இதனையடுத்து நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது இதனையடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூறுகையில் ஒன்றியத்தில் உள்ள நிர்வாகிகள் பேரூராட்சியில் என்ன வேலை தாங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அராஜகம் செய்து வருவதாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. எனவே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் போது முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags

Next Story