பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
X

சாலையில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்கும் காட்சி

பெரியபாளையம் தர்மராஜா கோவில் தெருவில் குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியபாளையம் தர்மராஜா கோவில் தெருவில் குண்டும் குழியுமாக மாறிய சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துநிற்பதால் துர்நாற்றம் சாலை பயன்படுத்த முடியாமல் அவதி.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊராட்சி உள்ள தர்மராஜா கோவில் பகுதியில் சுமார் 1000.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் முன்பு தார் சாலை அமைக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையால் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது. தற்போது மழை நீர் செல்ல வடிகால் கால்வாய் இல்லாத காரணத்தினால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சமீபத்தில் பெய்த சிறிய மழையில் மழை நீருடன் கலந்து பழுதடைந்த பகுதியில் தேங்கி நின்று குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் இவ்வழியை பயன்படுத்தும் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் மின்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

பழுதடைந்த சாலையை சீர் செய்து தர வேண்டும் என ஊராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் வட்டார வளர்ச்சி அலுவலர் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் இந்த மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதால் பல்வேறு விஷ காய்ச்சலும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர். எனவே மழைநீர் செல்ல வடிகால் கால்வாய் அமைத்து சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil