கும்மிடிப்பூண்டி மதுக்கடைகளில் சமூக இடைவெளி மாயம்- தொற்று பரவ வாய்ப்பு

கும்மிடிப்பூண்டி மதுக்கடைகளில் சமூக இடைவெளி மாயம்- தொற்று பரவ வாய்ப்பு
X

கும்மிடிப்பூண்டி டாஸ்மார்க் கடையில், சமூக இடைவெளியின்றி மதுவாங்கும் மதுப்பிரியர்கள்.

கும்மிடிப்பூண்டி டாஸ்மார்க் கடைகளில், கொரோனா விதிமீறி, சமூக இடைவெளியின்றி மதுப்பிரியர்கள் திரள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், 3 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த 3 மதுபானக் கடைகளிலும், தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், சமூக இடைவெளியின்றி, மதுப்பிரியர்கள் மதுவாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து புகார் தெரிவித்தாலும், காவல்துறையும் சுகாதாரத்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல், இக்கடைகளில், மதுபாட்டில் ஒன்றுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், இரவு 8 மணிக்கு மேல் மதுபாட்டில் ஒன்றுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; கொரோனா விதிமீறலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!