பெரியபாளையம் அருகே லட்சுமி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

பெரியபாளையம் அருகே லட்சுமி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
X

தீ மிதித்த பக்தர்கள்.

Today Temple News in Tamil -பெத்தநாயக்கன்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ லக்ஷ்மி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.

Today Temple News in Tamil - திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கிளாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி அம்மன் திருக்கோவிலின் தீமிதி திருவிழா நிகழ்ச்சி கடந்த 3 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து 10 நாட்களுக்கு நாள்தோறும் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், குங்கும அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் காப்பு கட்டி 1நாட்களுக்கு விரதம் இருந்து ஏரிக்கரையில் புனித நீராடி ஊர் எல்லை சுற்றி வந்த பின்னர் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெத்தநாயக்கன்பேட்டை கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story