கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம்

கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம்
X

கூட்டத்தில் பேசும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன்.

கவரப்பேட்டையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்பு.

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்வாக மறைந்த தலைவர்களின் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து ஒன்றிய செயலாளர் கி.வே. ஆனந்தகுமார் சிறப்பு தீர்மானங்களை கொண்டு வந்தார்.

அதில் இந்திய அரசில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்துவரும் அரை நூற்றாண்டில் பல குடியரசு தலைவர்களையும் பிரதமர்களையும் உருவாக்கிய அரசியல் சாணக்கியருமான மறைந்த கருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்கிட முதலமைச்சர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தீர்மானம் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட கழகத்தின் அனுமதியுடன் கருணாநிதிக்கு தனது சொந்த செலவில் திருவுருவ சிலை அமைக்க தயாராக இருப்பதாக ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ பேசுகையில் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் யாரும் கேட்கவில்லை, ஆனால் நமது முதலமைச்சர் மகளீருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தையும் மகளீர் உரிமைத்தொகை திட்டத்தையும் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் பகலவன, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி. ஹெச்.சேகர், மாவட்ட துணை செயலாளர் உமா மகேஸ்வரி,கதிரவன், எம்.எல்.ரவி மற்றும் பாஸ்கர் சுந்தரம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, மாநில ஐலக அணி துணை அமைப்பாளர் கன்னிகை ஜி.ஸ்டாலின், மாவட்ட பொருளாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், ராமமூர்த்தி, வெங்கடாசலம், ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!