அடிப்படை வசதிகளே இல்லாத கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம்

அடிப்படை வசதிகளே இல்லாத கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம்
X

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம்.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர பொதுமக்களும் அரசு ஊழியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொது மக்கள் ஊழியர்கள் தவித்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம். இந்த வட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ் 61 ஊராட்சிகள் அடங்கும். அதேபோல் இந்த அலுவலகத்தில் ஈ சேவை மையம், கருவூலம் உள்ளிட்ட கூடுதல் அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது.


இந்த நிலையில்61 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களின் நில ஆவணங்களின் குறைபாடுகள் குறித்தும், முதியோர் ஓய்வூதியம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், திருத்தல்,வாக்காளர் அடையாள அட்டை, நிவாரண உதவிகள் குறித்தும் அன்றாடம் இந்த வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இந்த அலுவலகத்தில் பல லட்ச ரூபாயில் கட்டப்பட்ட பொதுமக்கள் மற்றும் அங்கு பணி செய்யும் அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்ட கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவை பராமரிப்பில்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் அலுவலகத்தை சுற்றி அடர்ந்த புதர் மண்டிகள் வளர்ந்து கழிவு பொருட்கள் ஆங்காங்கே குவியல், குவியலாகவும காணப்படுகிறது.இது குறித்து வட்டாட்சியரிடம் பலமுறை புகார் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையே நீடித்து வருவது.


அலுவலக குறைபாடுகளையே சரி செய்ய முடியாத வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளால் பொதுமக்கள் குறைபாடுகளை சரி செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அலுவலகம் வரும் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!