ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம்

ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம்

ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கண்ளூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கண்ளூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆரணி அருகே கண்ளூர் கிராமத்தில் சுமார் 100.ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, மூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் அப்பகுதி மக்கள் பங்களிப்புடன் கோவிலை புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு இதில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி கணபதி பூஜை, புண்யாஹவாசனம், வேதபாராயணம், கலச ஸ்தாபனம், கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் இதனைத் தொடர்ந்து சுப்ரபாதம், கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம்,ஶ்ரீசூக்த் ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று 16ம் தேதி இரண்டாம் காலையாக பூஜை சிலைக்கு கரிகால அபிஷேகம், நடைபெற்றது.


இன்று 17ஆம் தேதி காலை 6 மணி அளவில் நாடி சந்தனம் பூஜை, ஹோமம் மஹாபூர்ணாஹூதி. நடைபெற்றது பின்னர் யாகசாலையில் கலசப்புறம் பாடு நிகழ்ச்சியில் புரோகிதர்கள் தலையில் கலசங்களை சுமந்து மேல தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வலம் வந்து பின்னர்10:30.மணி அளவில் விமான கோபுரத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது ஆலயத்திற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Read MoreRead Less
Next Story