கும்மிடிப்பூண்டியில் ஸ்ரீ தேவி பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

கும்மிடிப்பூண்டியில் ஸ்ரீ தேவி பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
X

கூரம்பாக்கம் கிராமத்தில் கிராம தேவதை ஸ்ரீ தேவி பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Today Temple News in Tamil -கும்மிடிப்பூண்டியில், ஸ்ரீ தேவி பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Today Temple News in Tamil - திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சங்காரணை ஊராட்சிக்கு உட்பட்ட கூரம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ தேவி பொன்னியம்மன் கோவில் நிர்மாணிக்கப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 3.ம் தேதி விசேஷ பந்தக்கால் நடுதல், ஶ்ரீதேவதானுக்ஞை விக்னேஸ்வர பூஜை நவக்கிரக பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜை யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இன்று காலை லக்ஷ்மி கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் செய்து முடிக்கப்பட்டு கலச புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கொண்டு புரோகிதர்கள் இன்று காலை 9.35 மணி அளவில் கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்

கும்பாபிஷேகத்தை காண சுற்று வட்டாரத்தில் கன்னிகைபேர், பெரியபாளையம், மதுர வாசல் உள்ளிட்ட 10.க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அப்போது, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், குங்கும அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவிற்கு திரளாக வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கூரம்பாக்கம் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags

Next Story