தமிழக வந்தது கிருஷ்ணா நதிநீர்: மலர்தூவி வரவேற்றனர்

தமிழக வந்தது கிருஷ்ணா நதிநீர்: மலர்தூவி வரவேற்றனர்
X

ஆந்திரா அரசு திறந்துவிட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது அமைச்சர் சாமு.நாசர் மலர்தூவி வரவேற்றார்.

ஆந்திரா அரசு திறந்துவிட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வந்தடைந்தது. அமைச்சர் சாமு.நாசர் மலர்தூவி வரவேற்றார்

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா அரசுடன் தெலுங்கு கங்கை நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் வருடந்தோறும் ஆண்டுக்கு இரண்டு தவணையாக 12 டிஎம்சி தமிழகத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி முதல் ஏப்ரல் 4 டிஎம்சி தண்ணீரும் ஜூன் முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பருவமழை காரணமாக பூண்டி செம்பரம்பாக்கம் புழல் கண்ணன் தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட ஏரிகளில் மொத்தம் டிசம்பர் 11 டி.எம்.சி தண்ணீர் இருப்பு இருந்தது காரணமாக ஜனவரி முதல் ஏப்ரல் காலகட்டத்தில் ஆந்திர அரசிடம் நீர் கேட்டுப் பெறவில்லை. இந்நிலையில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் மற்றும் செம்பரம்பாக்கம் சென்னை மக்களின் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருவதன் காரணமாக. மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 4 மாதத்திற்கு 6 டிஎம்சி தண்ணீர் கேட்டு பெறப்பட்டுள்ளது.அந்த நீர் 1 மாதத்திற்கு 1.5 டிஎம்சி தண்ணீர் வீதம் மொத்தம் 6 டிஎம்சி தண்ணீர் கேட்டு பெறப்பட்டுள்ளது. தற்போது சென்னை குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் 7 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருந்து வருகிறது.அந்த நீர் வருகின்ற 6 மாதத்திற்கு பயன்பாட்டிற்கு இருந்து வரும்.

முதல்கட்டமாக 1500 கன அடி தண்ணீர் கடந்த 5 ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. இந்த நீரானது கடந்த 3 நாட்களில் 152 கிலோமீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு இன்று வந்தடைந்தது. தமிழக எல்லைக்குள் வந்த தண்ணீரை தமிழக பால்வளத்தறை அமைச்சர் ஆவடி.சாமு.நாசர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசுவாமி, பொதுப்பணி துறை அதிகாரி தில்லைக்கரசி, ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர் அதிகாரிகள் தெரிவிக்கையில் தமிழக எல்லைக்குள் வந்த இந்த தண்ணீரானது

25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு நாளை காலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மக்களுக்கு போதிய குடிநீர் ஏரிகளில் இருப்பு ஏற்கனவே இருப்பதாலும் ஆந்திரா அரசு திறந்து விடப்பட்ட தண்ணீரலும் இந்த ஆண்டு டிசம்பர் வரை தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருக்காது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags

Next Story
ai marketing future