கோட்டகரை பி.டி.ஒ.அலுவலகத்தில் 10ஆண்டுக்குபிறகு எம்எல்ஏ அலுவலகம்திறப்பு

கோட்டகரை பி.டி.ஒ.அலுவலகத்தில் 10ஆண்டுக்குபிறகு எம்எல்ஏ அலுவலகம்திறப்பு
X

புதிதாக திறக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகம்

கும்மிடிப்பூண்டி அருகே கோட்டகரை பி.டி.ஒ அலுவலகத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சட்டமன்ற அலுவலகத்தை நாளை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் திறந்து வைக்கிறார்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரை பி.டி.ஒ அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் தங்கள் மனுக்களை கொடுக்க முடியாமல் தவித்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழகத்தில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஜே. கோவிந்தராஜன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் நாளை பி.டி.ஒ. அலுவலகத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சட்டமன்ற அலுவலகத்தை திறக்கப்பட உள்ளது.

இந்த கட்டிடத்தில் பொதுமக்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாற்காலி மற்றும் மின்விசிறி அமைத்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பொது மக்களை வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!