கொசஸ்தலை ஆற்றின் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 9 கடைகள் அகற்றம்

கொசஸ்தலை ஆற்றின் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த  9 கடைகள் அகற்றம்
X

கொசஸ்தலை ஆற்றின் கரையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்பட்டன.

கொசஸ்தலை ஆற்றின் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 9 கடைகள் இயந்திரங்கள் உதவியுடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பூச்சிஅத்திப்பேடு பகுதியில் கொசஸ்தலை ஆற்றுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் கரையில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து கடைகள் போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் இன்று ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடங்கினர். இதனையடுத்து கால்வாயின் கரையில் ஆக்கிரமித்து போடப்பட்ட கடை உரிமையாளர்கள் தாங்களாகவே பொருட்களை பிரித்து எடுத்து சென்றனர். எஞ்சிய கடைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். கொசஸ்தலை ஆற்றின் நீர்வரத்து கால்வாயின் கரைகளை ஆக்கிரமித்து போடப்பட்ட 9கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!