எல்லாபுரம் ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
எல்லாபுரம் ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தின அனுசரிப்பின்போது பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு, மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் 6.ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட கருணாநிதியின் படத்திற்கு ஒன்றிய செயலாளர் பி.ஜெ. மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் கட்சி கொடிநியை ஏற்றி வைத்து ஏழை எளிய மக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் ஏவி.ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி. லோகேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சம்பத், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே. ராஜேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மற்றும் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் சிவாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, கார்த்திக், விஜய பிரசாத், பார்த்திபன், முகமது மொய்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஆ.சத்திய வேலு தலைமையில் கன்னிகைப்பேர், பூச்சி அத்திப்பட்டு, மஞ்சக் கரணை,பாகல்மேடு, திருக்கண்டலம், உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக்கொடியினியை ஏற்றி வைத்து கருணாநிதி படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இதில் அவைத்தலைவர் முனி வேல், மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், ஒன்றிய பொருளாளர் குப்பன், ஒன்றிய துணை செயலாளர்கள் உதயசூரியன், உதயகுமார், பாஸ்கர், மற்றும் நிர்வாகிகள் மதன் சத்யராஜ்,முரளி, விநாயகம். பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu