கண்ணன் கோட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கண்ணன் கோட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
X

வேணுகோபால சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

கண்ணன் கோட்டை கிராமத்தில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம். கண்ணன் கோட்டை கிராமத்தில் சுமார் 43 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த 23.ஆம் தேதி பஞ்சமி திதி மகா நட்சத்திரம் கூடிய சுபதனத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணா குத்தி, ஹோமங்கள் நாள்தோறும் மற்றும் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்தநிலையில். யாகசாலையிலிருந்து புரோகிதர்கள் யாகசாலை ஹோமங்கள் பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர் காலை 6 மணி அளவில் மேளதாளங்கள் முருங்க யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கோவில் சுற்றி வலம் வந்து ஆலயத்தின் மீதுள்ள வேணுகோபால சுவாமிக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

அங்கு வந்திருந்த கிராமத்தின் சேர்ந்த பக்தர்கள் மீது புனித நீரை எடுக்கப்பட்டது.பின்னர் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேணுகோபால சுவாமிக்கு தீப,தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கண்ணன் கோட்டை கிராம மக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!