முழு கொள்ளளவை எட்டியது சென்னைக்கு குடிநீர் வழங்கும் கண்ணன் கோட்டை ஏரி
கண்ணன் கோட்டை ஏரி.
Lake Water - கடந்த 2020ஆம் ஆண்டு சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழையில் முழுவதும் நிரம்பியிருந்த ஏரியில் நீர்மட்டம் மெல்ல சரிந்து நீர்இருப்பு 90%இருந்தது. கடந்த சில தினங்களாக ஆந்திராவில் இருந்து வந்த கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு அனுப்பாமல் கண்ணன்கோட்டை ஏரிக்கு திருப்பி விடப்பட்டது. இந்த நிலையில் 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரி 3 மாதங்களுக்கு பிறகு இன்று முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியை எட்டியது.
ஏரிக்கு தற்போது 225 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. முழு கொள்ளளவை கண்ணன்கோட்டை ஏரி எட்டிய நிலையில் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்தில் 210 கனஅடி இங்கு அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய உபரி நீர் போக்கி வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து கிருஷ்ணா நதிநீர் ஏரிக்கு வரும் நிலையில் முழுவதுமாக கலங்கல் மூலமாக உபரிநீராக வெளியேறி ஓடையில் கலந்து செல்கிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu