கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியிடம் கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியிடம் கத்தி முனையில்  நகை, பணம் கொள்ளை
X

நகை பணத்தை பறி கொடுத்த மூதாட்டி ராணியம்மாள்.

கும்மிடிப்பூண்டி அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணம் கொள்ளை யடிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி இரண்டு சவரன் நகை, 11 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழை காரணமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிராமப்புற மக்கள் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரகு(வயது 54).குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டை ஒட்டியுள்ள ஓடு வேயப்பட்ட இன்னொரு வீட்டில் அவருடைய தாயார் ராணியம்மாள்(65) நீண்ட காலமாக வசித்து வருகிறார்.

நேற்று வழக்கம் போல் மழை என்பதால் இரவு7மணி அளவில் உணவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க சென்றுள்ளனர்.இன்று அதிகாலை 2 மணி அளவில் கொட்டும் மழையிலும் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் மூதாட்டி ராணியம்மாள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் கத்தியை எடுத்து மூதாட்டி கழுத்தில் வைத்து அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி, காதில் இருந்த கம்பல் , மூக்குத்தி மற்றும் சுருக்குப்பையில் இருந்த 11 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதன்பின் மூதாட்டி ராணியம்மாள் வயது முதிர்வு காரணமாக பயத்தில் அப்படியே உறங்கி விட்டார். காலை அவருடைய மகன் ரகு வந்து பார்த்தபோது மேற்கண்ட மர்ம நபர்கள் கொள்ளையடித்து தெரிய வந்தது. இது குறித்து ரகு கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவலை கூறியுள்ளார்.தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீசார் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணம் கொள்ளையடித்த இந்த சம்பவம் ஆத்துப்பாக்கம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு