கும்மிடிப்பூண்டி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
X
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டில் நகை பணம் கொள்ளையடித்த

கும்மிடிப்பூண்டியில் தனியார் வங்கி மேலாளர் வீட்டில் 28 சவரன் தங்க நகை, 3000 ரொக்க பணம், ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவை திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்மிடிப்பூண்டி அடுத்த குருச்சந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 34). இவர் தனியார் வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகி இவருக்கு தாரகை (வயது 26),என்ற மனைவியும்,பிரணவி(2 வயது) மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் பொழுதுபோக்கிற்காக பூந்தமல்லி அருகே உள்ள குயின்ஸ் லேண்ட் சென்றார். அங்கு பொழுது கழித்து விட்டு வரும்போது மகள் பிரணவிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகாமையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு குழந்தையை அழைத்துச் சென்ற ராஜசேகர், திங்கட் கிழமை கிருஷ்ணாஷ்டமி அரசு விடுமுறை என்பதால் அங்கேயே தங்கி விட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 28 சவரன் தங்க நகைகள் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story