எல்லாபுரம் ஒன்றியம் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

எல்லாபுரம் ஒன்றியம் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள்  விழா
X

எல்லாபுரம் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னிட்டு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே வடமதுரையில் எல்லாபுரம் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னிட்டு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74.ஆவது பிறந்தநாளை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் வடமதுரை அரசு பள்ளி அருகே வைக்கபட்ட அவரது படத்திற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மகேந்திரன், ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ் ஆகியோரின் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து குத்துவிளக்கை ஏற்றி மலர் தூவி ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் கலந்து கொண்டார். இதனையடுத்து ஒன்றியக்குழு பெரும் தலைவர் ரமேஷ் ஏற்பாட்டு அவரது இல்லத்தில் ஒன்றியத்தில் உள்ள கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் 1500 பேருக்கு வேட்டி, சட்டை, காலண்டர் மற்றும் அறுசுவை விருந்து பிரியாணி உள்ளிட்டவை ஒன்றியச் செயலாளர் மகேந்திரன் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் ஒன்றிய துணைத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் வழங்கினார்.

இதில் நிர்வாகிகள் பாஸ்டர் தயாளன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர் ராஜசேகரன், ராஜீவ் காந்தி, ராமதாஸ்,சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன்,ராஜசேகர், நாகப்பன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் எம்.ராஜா, வெங்கல் நாகராஜன், புஷ்பராஜ்,ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!