ஜெ,வை சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச் சென்றிருந்தால் பிழைத்திருப்பார்: ஜெயக்குமார்

ஜெ,வை சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச் சென்றிருந்தால் பிழைத்திருப்பார்: ஜெயக்குமார்
X

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்

ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, அதிகாரத்தில் சசிகலா இருந்த நிலையில் வெளிநாட்டுக்கு அழைத்து சென்று மருத்துவ வசதி செய்திருந்தால் ஜெயலலிதா உயிர் பிழைத்திருப்பார் எனவும், அதை தான் ஆறுமுகசாமி ஆணையமும் கூறியுள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதரபாக்கம் அருகே பாதிரிவேடு அதிமுகவைச் சேர்ந்த டேவிட் குமார் சசிகலா தம்பதியினர் புதுமனை புகுவிழாவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார் கூறியதாவது:

சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஒபிஎஸ், சசிகலா காலில் விழுந்தவர். ஓபிஎஸ் தொடங்கியுள்ளது தர்ம யுத்தம் 2.0.அது தர்ம யுத்தம் அல்ல, கர்ம யுத்தம். முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பில் இருந்தபோது ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என தெரிவித்தார்.

திமுகவுடன் சேர்ந்து அதிமுக கட்சி அலுவலகத்தை ஓபிஎஸ் தாக்கினார். திமுக ஒபிஎஸ்க்கு பின்புலமல்ல, பக்க பலமாக உள்ளது என்று கூறினார்

சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, முதல்வர் தொகுதியை யாரும் படம் பிடிக்க முடியாது. எதிர்கட்சிகளை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் 4-வது தூணையும் திமுக மிரட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வெளிப்படை தன்மை இல்லை. மழை பெய்யும் போது சாலை அமைக்கிறது அரசு. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.

அம்மா மருந்தகத்துக்கு திமுக அரசு எந்த பயனையும் செய்வதில்லை. ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது, அரசு மக்களின் உயிரை பற்றி பொருட்படுத்தாமல் உள்ளது. சொத்து வரியை ஏற்றிய அரசு, பொதுமக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியையும் செய்யவில்லை எனவும், ஆவின் பால் பாக்கெட் விலை உயர்வு திமுக அரசு மக்களுக்கு வழங்கிய பரிசு என தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது. விளம்பரம் செய்வதில் தான் இந்த ஆட்சி உள்ளது, பொய்களாலேயே ஆட்சி நடக்கிறது எனவும் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது, அதனை எதிர்த்து ஓட்டு போட்டவர் ஓபிஎஸ். உப்பிட்டவருக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ் எனவும் தெரிவித்தார்.

இதில் கும்மிடிப்பூண்டி அதிமுக ஒன்றிய செயலாளர் கோபால நாயுடு, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.எம். சிவக்குமார், ஒன்றிய துணை செயலாளர் நாகராஜ், தேவி ஷங்கர், நிகழ்ச்சியில் முன்னதாக விழாவில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுநீயம் பி.பலராமன், முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ்.விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். எம்.ஸ்ரீதர், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் ரமேஷ் குமார், ஆதியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!