மின்சாரம் தாக்கி இருவர் இறந்த வழக்கில் நில உரிமையாளருக்கு சிறை தண்டனை

மின்சாரம் தாக்கி இருவர் இறந்த வழக்கில் நில உரிமையாளருக்கு சிறை தண்டனை
X
மின்சாரம் தாக்கி இருவர் இறந்த வழக்கில் நில உரிமையாளருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெரியபாளையம் அருகே வயலுக்கு திருட்டு மின்சாரம் வைத்து இருவர் உயிரிழந்த வழக்கில் நிலத்தின் உரிமையாளருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிப்பு நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரனையை சேர்ந்தவர் சேகர். விவசாயி. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தனது நிலத்தில் திருட்டு மின்சாரம் எடுத்து நெல் சாகுபடிசெய்திருந்தார். அப்போது அங்கு வேலைக்கு வந்த முத்துக்குமார், குருநாதன் ஆகிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக பெரியபாளையம் போலீசார் சேகரை கைது செய்தனர்.

அலட்சியமாக செயல்படுதல், அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் என 2பிரிவுகளில் சேகர் மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சேகருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊத்துக்கோட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சேகரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!