பெருவாயல் ஊராட்சியில் 100 நாள் பணியாளருக்கு அட்டை வழங்கல்

பெருவாயல் ஊராட்சியில் 100 நாள் பணியாளருக்கு அட்டை வழங்கல்
X

பெருவாயல் ஊராட்சியில் 100 வேலை அட்டை வழங்கும் நிகழ்ச்சி.

பெருவாயல் ஊராட்சியில் 100 நாள் திட்ட பணியாளருக்கு அட்டை வழங்கங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்டது பெருவாயல் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

பணியாளர்களுக்கு அவர்களது பணியினை புதுப்பிக்கும் உறுப்பினர் கார்டுகளை ஊராட்சி மன்ற தலைவர் பெருவாயல் ராஜசேகர் நேரில் வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி பெருவாயல் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது உறுப்பினர் கார்டுகளை பெற்றுச் சென்றனர். அப்பொழுது ஊராட்சிமன்ற செயலாளர் பிரபு, ஊராட்சி உதவியாளர் வானஸி ஆகியோர் உடனிருந்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!