கும்மிடிப்பூண்டி பேருராட்சியில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

கும்மிடிப்பூண்டி பேருராட்சியில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
X

கும்மிடிபூண்டி பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கும்மிடிபூண்டி பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் அறிமுக மற்றும் வாக்கு சேகரிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் அந்தந்தக்கட்சிகள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிபூண்டி பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வெற்றிப் பெறுவது குறித்து மற்றும் பொறுப்பாளர்கள் பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

இதற்கான நிகழ்ச்சி கும்மிடிபூண்டி ஜி.என்.டி.சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவுமான டிஜே கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.

விழாவில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் 15 வார்டு வேட்பாளர்களான காளிதாஸ், ஷகிலா அறிவழகன், சீனிவாசன், முனியாண்டி, கருணா கரன், மீனாட்சி, துர்கேஸ்வரி பாஸ்கர், கீதாராணி வெங்கடேசன், நசரத் இஸ்மாயில், லட்சுமி ராஜா, ஷகிலா உமாபதி, குமர பூபதி, விமலா அர்ச்சுதன், குப்பன், ராஜேஸ்வரி சுந்தர் ராஜன் உள்ளிட்ட 15 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வெற்றி பெறுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இந் நிகழ்ச்சியில் கழக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட பொறுப்புக்குழு உறு ப்பினர் வெங்கடாஜலபதி, மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அமைப் பாளர்கள் செயல்வீரர்கள் கழக முன்னோடிகள் எனஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி நகர பேரூர் கழக செயலாளர் அறிவழகன் செய்திருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!