ஊத்துக்கோட்டையில் திமுக வேட்பாளருக்கு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஊத்துக்கோட்டையில் திமுக வேட்பாளருக்கு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

ஊத்துக்கோட்டை பேரூராட்சி 11வது வார்டு வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவினர். 

ஊத்துக்கோட்டையில் திமுக வேட்பாளரை ஆதரித்து கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊத்துக்கோட்டை பேரூராட்சி 11வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் என். சுமலதா நரேஷ்குமார் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் கன்னிகை ஜி.ஸ்டாலின் ஆகியோர் 11வது வார்டில் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இதில் ஏனம்பாக்கம் கே.சம்பத், ஊத்துக்கோட்டை முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.ராதகிருஷ்ணான், எம்.சந்திரபிரகஷ், கொள்கை டி.பாபு, வே.நெடுஞ்செழியன், ஜெயசிலன், ஆனந்த் மற்றும் கழக முன்னோடிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future