ஊத்துக்கோட்டை பேரூராட்சி 4வது வார்டு திமுக வேட்பாளருக்கு கட்சியினர் தீவிர பிரச்சாரம்

ஊத்துக்கோட்டை பேரூராட்சி 4வது வார்டு திமுக வேட்பாளருக்கு கட்சியினர் தீவிர பிரச்சாரம்
X

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக வேட்பாளர் அபிராமி குமரவேலை ஆதரித்து கட்சியினர் வாக்கு  சேகரித்தனர்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சி 4வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் அபிராமி குமரவேலுக்கு கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் 4-வது வார்டில் அபிராமி குமரவேல் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் அறிவுறுத்தலின்படி, 4-ஆவது வார்டு தேர்தல் பொறுப்பாளர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ் ஏற்பாட்டில் ரெட்டி தெரு நேரு சாலை, மாதா கோவில் தெரு, முனீஸ்வரர் கோவில் தெரு, பேரூராட்சி பின்புறம் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு நடைபயனமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பொறுப்புகுழு உறுப்பினர் இ.ஏ.பி.சிவாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 8 மாதகால ஆட்சியில் மக்களுக்கு நேரிடையாக பல திட்டங்கள் சென்று வழங்கிய நல்லாட்சி திமுக ஆட்சிதான் என்றும், இதுதான் மக்களுக்கான ஆட்சி என்றும் எடுத்துகூறி தமிழகத்தில் திமுக நல்லாட்சி போல் அமைந்தது போல், நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்து உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைந்திட வாக்களீப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு என்று மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கன்னிகை ஜி.ஸ்டாலின், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்ததி, பூண்டி ஒன்றிய செயலாளர்கள் டி.கே. சந்திரசேகரன், ரவி, ஊத்துக்கோட்டை நகர செயலாளர் அப்துல் ரஷீத், பொதுக்குழு உறுப்பினர் ஏ,வி.ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி வி.பி. ரவிக்குமார் ஆகிய ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!