கும்மிடிப்பூண்டியில் ஒருங்கிணைந்த வேளாண்மை கட்டிடத் திறப்பு விழா

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.2 கோடியே 65 லட்சத்தில் ஒருங்கிணைந்த வேளாண் கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
Inauguration of Integrated Agriculture Building
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் கட்டிடம் திறக்கப்பட்டது.
இந்த விழாவிற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி கல்வெட்டை திறந்து ஒருங்கிணைந்த வேளாண் கட்டிடத்தை திறந்து வைத்தார்.நிகழ்விற்கு ஒன்றிய குழு துணைத் தலைவர் மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்கள் ரவிக்குமார், ஜெயச்சந்திரன், மெய்யழகன், துணை வேளாண்மை இயக்குனர் சுசிலா, வேளாண் உதவி இயக்குனர் ஸ்ரீதேவி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அருள் போஸ்கோ பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வை ஒட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.3000 சதுர அடியில் அமைக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகத்தில் வேளாண்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை துறை ஆகிய நான்கு அலுவலகங்கள் இணைந்து செயல்படும். மேலும் தரைதளத்தில் கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எஸ்.ரமேஷ் , கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், மாவட்ட நிர்வாகி பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்வழி கிரிஜா குமார், மாநெல்லூர் லாரன்ஸ், பாதிரிவேடு என்.டி. மூர்த்தி, குருவாட்டுச்சேரி கோமதி சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை இயக்குனர் சுசீலா,வேளாண்மை உதவி இயக்குனர் ஸ்ரீதேவி,வேளாண்மை அலுவலர் நவீன்பிரசாத், உதவி விதை அலுவலர் கணேசன் ,உதவி வேளாண்மை அலுவலர்கள் அருள்முருகன்,ஆனந்த்ராஜ ,சுகுணா, முருகன், மாதவன், கிடங்கு மேலாளர்கள் திருநாவுக்கரசு, நித்யா முன் நின்று சிறப்பாக நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu