குருவாட்டுச்சேரி வேளாண் விவசாயிகள் சங்க திறப்பு விழா
சிறு குறு வேளாண் விவசாயிகள் சங்கத்தை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.
குருவாட்டுச்சேரி ஊராட்சியில் சிறுகுறு வேளாண் விவசாயிகள் சங்கத்தை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்து வைத்துப் பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த குருவாட்டுச்சேரி ஊராட்சி செல்லும் சாலையில் சிறு குறு வேளாண் விவசாயிகள் சங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு சிறு,குரு வேளாண் விவசாய சங்க செயலாளர் சி. சுகுமார் அனைவரையும் வரவேற்றார்.சங்கத் தலைவர் என். எஸ். கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் பா.செ குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் எஸ். ராமஜெயம், ஒன்றிய செயலாளர் மு. மணிபாலன், பேரூர் செயலாளர் அறிவழகன், புல்லட் கோவிந்தராஜ், சங்கத்தின் பொருளாளர் அ. வேலாயுதம், நிர்வாகிகள் முரளி ராதாகிருஷ்ணன், விநாயகம், சரவணன், பாலன், கந்தசாமி வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு சிறு, குறு வேளாண் சங்க பலகையை திறந்து வைத்து பேசியதாவது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விவசாயத்திற்கு அதிக அளவில் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருவதில் தமிழக முதல் இடத்தில் உள்ளது.
நெல் கொள்முதல் அமைத்து தருவதில் முதல் அனைத்து பணிகளிலும் சிறப்பாக செய்து வருகிறார். அத்தோடு தற்போது பருவ மழை காரணமாக ஐந்து தினங்களுக்கு முன்பு காற்றுடன் வீசிய மழை பெய்துள்ளது.
இதில் பெரும் அளவில் விவசாயிகள் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏனாதிமேல் பக்கம், அயநெல்லூர், ரெட்டம்பேடு, நத்தம், மேலகாலனி, சின்ன ஒபுளாபுரம்,எளாவூர், பூவலை, பூவாலம்பேடு, கெட்டனமல்லி, பன்பபாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார அனைத்து பகுதிகளிலும் வேளாண்துறை அதிகாரிகளை வரவழைத்து பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நடந்து வருகிறது.
அதுமட்டுமல்ல கால்நடை உயிரிழப்பு மரங்கள் சாய்ந்தது அதற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு வேளாண் துறையில் பல மானியங்களை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதனை விவசாயிகள் நேரடியாக சென்று விண்ணப்பித்து அதன் பயன் பெற வேண்டும் எனவும், இது போன்ற விவசாயிகள் சங்கம் கும்மிடிப்பூண்டி பல பகுதிகளில் உருவாக வேண்டும் என்றும், இதனால் விவசாயிகள் மேன்மை அடைய வேண்டுமென என பேசினார்.
இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu