பெரியபாளையத்தில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா

பெரியபாளையத்தில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா
X

பெரிய பாளையத்தில் திறக்கப்பட்ட மக்கள் மருந்தகம்.

பெரியபாளையத்தில் மக்கள் மருந்தகத்தை பி.ஜே.பி. மாநில செயலாளர் சூர்யா திறந்து வைத்தார்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை பெரியபாளையத்தில் பி.ஜே.பி மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் சார்பில் மக்கள் மருந்தகம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது.இந்த மருந்தகங்களில் பல்வேறு வகையான மருந்துகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் ஏழை,எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.


இந்நிலையில்,திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் பாஜக ஐ.டி பிரிவு மாநில தலைவர் மகேஷ் மக்கள் மருந்தகத்தை அமைத்துள்ளார்.இதனை பி.ஜே.பி மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதன்பின்னர், குத்துவிளக்கேற்றி மருந்தகத்தில் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், பாஜக மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார்,அஸ்வின், மாநில நிர்வாகி அழிஞ்சிவாக்கம் பாஸ்கரன்,ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், ஏனம்பாக்கம் ஜெ.ரவி,கே.ஜி.எம்.சுப்பிரமணி, நாகராஜ்,ஒன்றிய நிர்வாகிகள் ஜெயபிரகாஷ்,சுதாகர், நெல்சன் உள்ளிட்ட மாநில,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த மருந்தகத்தில் அனைத்து விதமான மருந்துகளும் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பலன் அடையுமாறு வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai ethics in healthcare