திருவள்ளூர் அருகே உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் துவக்க விழா
உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற துவக்க விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெரியபாளையம் அடுத்த காக்கவாக்கம் கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற முப்பெரும் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், காக்கவாக்கம் கிளை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் துவக்க விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும்,பொது மக்களுக்கும் என 200 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நிகழ்ச்சி காக்கவாக்கம் கிரேசூட் ஓட்டல் எதிரே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,ஒன்றிய பொருளாளர் சுந்தர்ஏழுமலை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார்,கிளை தலைவர் கோகுல்,செயலாளர் புவனேஷ்,பொருளாளர் நரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்,சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் வி.ஜே.உமாமகேஸ்வரன் கலந்து கொண்டு நற்பணி மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் கிரண்குமார், மாவட்ட பொருளாளர் விஜயசாரதி ஆகியோர் 200 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின்போது காக்கவாக்கம் கிராம பொதுமக்கள் தங்களது பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் மீண்டும் இவ்வழித்தடத்தில் இப்பேருந்தை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய உமாமகேஸ்வரன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி இன்னும் ஒரு மாதத்திற்குள் மீண்டும் இவ்வழித்தடத்தில் பேருந்தை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.
இந்நிகழ்ச்சியில்,திருவள்ளூர் ராஜ் மோகன், பூண்டி ரஞ்சித்குமார், பெரியபாளையம் பாஷா, தண்டலம் விக்கி,சரத்குமார், சுர்ஜித்,தொளவேடு கிளை கழக செயலாளர் எம்.செல்வம், கே.ஏழுமலை,மன்ற உறுப்பினர்கள் தனுஷ்,ஹரிஷ்,நவீன், துளசிராம்,ஹேமந்த், திவாகர்,குமரேஷ்,ஜவகர், லோகேஷ்,தனுஷ்,திலீப்,விக்கி உள்ளிட்ட ஏராளமானேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைஒன்றிய பொருளாளர் சுந்தர்ஏழுமலை மற்றும் மன்ற நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu