கும்மிடிப்பூண்டியில் இளைஞர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு

கும்மிடிப்பூண்டியில்  இளைஞர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு
X
கும்மிடிப்பூண்டியில் அதிகாரிகள் முன்னிலையில் இளைஞர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கும்மிடிப்பூண்டியில் பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு என கூறி அகற்ற சென்ற அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்து வெளியே ஓடி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டைகரை பகுதியைச் சேர்ந்தவர் தினகரன்- கல்யாணி தம்பதியர். இந்த தம்பதியர் கடந்த 50 வருடங்களுக்கு முன் பர்மாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதற்கான ஆதாரங்களை கல்யாணி இதுவரையில் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் நிலையில் கணவனை இழந்த கல்யாணி தனது இரண்டு மகன்களுடன் கல்யாணி கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டை கரை நேதாஜி நகர் 2 வது தெருவில் 50 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில். கல்யாணியின் ஏழ்மையை அறிந்த ஒரு தம்பதியர் தனக்கு சொந்தமான ஒன்றரை சென்ட் நிலத்தை கல்யாணத்துக்கு கொடுத்துவிட்டு சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்யாணியின் வீட்டின் பின்புறம் சிலர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு சென்று வர இந்த இடத்தை கொடுக்குமாறும் தொடர்ந்து கல்யாணி இடம் பலமுறை மிரட்டல்கள் விட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் மனுவும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் இந்த இடத்தை நேரடியாக ஆய்வு செய்து அந்த இடம் பட்டா இடம் எனவே நீதிமன்றத்தை நாடி முறையாக தீர்வு பெறுமாறு இருதரப்புக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.


அதே இடத்தை முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும் இது ஆக்கிரமிப்பு இடம் எனக்கூறி ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான கடிதம் கொடுத்துள்ளதாக கூறி வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் ஒரு வார காலம் அவகாசம் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.

ஆனால் மின்வாரியத்துறையினர் அதிரடியாக வீட்டின் மின் இணைப்பை துண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் வீட்டை பூட்டிக்கொண்டு உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்றியவாறு அதிகாரிகள் முன்னிலையில் தெருக்களில் அலறி ஓடினார்.அவரை காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் லாவகமாக மீட்டு குமிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால் ராஜகுமாரின் உடல் 50 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் கே. எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!