காெராேனாவால் மண்பாண்ட தாெழில் பாதிப்பு: அரசு உதவ தாெழிலாளர்கள் காேரிக்கை
பொன்னேரி, கும்மிடிபூண்டி பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்டம் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொடர் மழை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மண்பாண்ட தொழில் பாதித்துள்ளதாக தொழிலாளிகள் வேதனை. அரசாங்கம் உதவ வேண்டுமென மண்பாண்ட தொழிலாளர் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட அகரம் கிராம கும்மிடிபூண்டி தொகுதிக்குடபட்ட செம்பேடு கிராமம் நெய்வேலி, எளாவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கு மேற்பட்ட மண்பாண்ட செய்யும் தொழிலாளிகள் காலங்காலமாக மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இந்த தயார் செய்யும் பொருட்கள் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சென்னை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு சென்று வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மண்பாண்ட தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்பாண்டம் தொழில் செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், கடந்த காலங்களில் மண்பாண்ட தொழில் மக்கள் இடையே அமோக வரவேற்பு இருந்ததாகவும், தற்போது இருக்கின்ற காலகட்டத்தில் மண்பாண்ட பொருட்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு மாறு எவர்சில்வர் ஸ்டில் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும் இதனால் மண்பாண்ட தொழில் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கடந்த மாதம் சென்ற கார்த்திகை தீபத்தை நம்பி அதிக அளவில் அகல்விளக்கு தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் பருவமழை காரணத்தினால் தயார் செய்த பொருட்களை பாதுகாக்க சரியான இடம் இடம் இல்லாத காரணத்தினாலும் பொருட்களை வேக வைத்தும் சூலையில் ஏற்றி சூலை பற்ற வைக்க முடியாமலும் பல இன்னலுக்கு ஆளாகியதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மண்பாண்டம் செய்ய தேவையான களிமண் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும், ஏரிகளில் களிமண் மண் எடுப்பதற்கு அதிகாரிகளை அனுமதி கேட்டால் மறுப்பதாகவும் இதனால் சிலர் இந்த தொழிலை விட்டு விட்டு வெளியேறி மற்ற மாநிலங்களுக்கு பிழைப்பைத் தேடி செல்கின்ற அவல நிலை உருவாகியுள்ளது. இதுபோன்ற நிலைமை தொடராமல் இருக்க மற்ற தொழில்களுக்கு அரசாங்கம் உதவி வழங்குவது போல் தங்களுக்கு உதவ வேண்டும் என மண் எடுப்பதற்கும் அதிகாரிகள் அனுமதி தரவேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு உதவிட வேண்டுமென்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu