கள்ளக்காதலுக்கு தடையான கணவன் கொலை :மனைவி உட்பட 5 பேர் கைது

கள்ளக்காதலுக்கு தடையான கணவன்  கொலை :மனைவி உட்பட 5 பேர் கைது
X
Illegal Contact Husband Murdered கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேட்டில் தகாத உறவுக்கு தொந்தரவாக இருந்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Illegal Contact Husband Murdered

கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் வெட்டி கொலை செய்த வழக்கில் 5.பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4.பேர் தலை மறைவானவர்களை போலீசார் தேடல்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பாதிரிவேடு கிராமத்தில் சம்பவத்தன்று இரவு பாலசுப்பிரமணி ( வயது 43),என்ற நெசவுத் தொழிலாளி காணாமல் போனதாக அவரது மனைவி புவனேஸ்வரி(வயது 38) என்பவர் அவரது கணவரை கண்டுபிடித்து தருமாறு பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து பாதிரிவேடு போலீசார் உறவினர்களின் உதவியுடன் காணாமல் போன பாலசுப்பிரமணியனைத் தேடி வந்த நிலையில்.அவரது ஹெல்மெட் மற்றும் உடமைகள் வீட்டின் அருகே உள்ள சின்னேரி குளம் அருகே இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியை சுற்றி போலீசார் தேடியபோது ஏரியின் பின்புறம் கரையை ஒட்டி பள்ளம் தோண்டப்பட்ட தடயம் இருப்பதை கண்ட போலீசார் இதுகுறித்து வருவாய்த் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களது முன்னிலையில் பள்ளத்தை தோண்டிய போது பாலசுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் கைகள் உடைக்கப்பட்டு தலை, வயிறு, உள்ளிட்ட பகுதிகளில் பலமாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர்.அதன் பின்னர் ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் விசாரணையில் நடத்தி போது கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியின் மனைவி புவனேஸ்வரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து 5.மணிநேரம் விசாரணை நடத்தியதில் அப்போது தன்னுடைய கணவனை கூலிப்படை வைத்து கள்ளக்காதனுக்காக கொலை செய்தது புவனேஸ்வரி ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரின் மருமகன் முத்தம் ஜெயம் என்பவரிடம் சில ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டு பலமுறை அவர்கள் உல்லாசமாக இருந்துள்ளோம் இந்த நிலையில் என் கணவர் தொலைபேசி எண்ணை வைத்து அடிக்கடி செல்போன் பயன்படுத்தக் கூடாது என தொந்தரவு செய்து வந்ததாகவும். தங்களின் நெருக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தனது கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கள்ளக்காதலன் முத்தும் ஜெயம் உடன் சேர்ந்து கூலி படையை வைத்து கொலை செய்ய திட்டமிட்டும் அதற்கு இரண்டு முறை தவறிவிட்டதாகவும்,அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அதிர்ஷ்டவசமாக நள்ளிரவில் என் கணவர் வந்துள்ளார்.

இதனை சுதாரித்துக் கொண்ட கூலிப்படையைச் சேர்ந்த பாதிரிவேடு - மாநெல்லூர் இடங்களைச் சேர்ந்த பிரபு( வயது 24), ஹேமநாத்( வயது 22), இன்பராஜ்( வயது 23), சுரேந்தர்( வயது 22), அஜய் ( வயது 24),பாலாஜி( வயது 24) சூர்யா( வயது 22) ஆகியோர் சேர்ந்து கொலை செய்து அருகே இருந்த சின்னேரி குளம் ஓரமாக வெட்டி புதைத்து விட்டனர்.

இதற்கிடையில் நானும் என் கள்ளக்காதலமான முத்தும்ஜெயம் இருவரும் அன்று இரவு உல்லாசமாக இருந்தோம் என விசாரணையில் அவர் தெரிவித்தார் இதைத்தொடர்ந்து போலீசார் புவனேஸ்வரி கள்ளக்காதலனான முத்தும் ஜெயம், புவனேஸ்வரி, ஹேமநாத், இன்பராஜ், சுரேந்தர், ஆகியோரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பிரபு, அஜய், பாலாஜி, சூர்யா ஆகிய நான்கு பேரை இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் பாதிரிவேடு சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து