முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு! கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!

முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு! கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!
X

கும்மிடிப்பூண்டியில் கிடந்த மனித எலும்புக்கூடால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே முட்புதரில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி அருகே முட்புதரில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்காக மாணவி வீட்டில் வைத்திருந்து வெளியில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்து அமைந்துள்ளது சாமிரெட்டி கண்டிகை கிராமம். இந்த கிராமத்தில் ஒதுக்குபுறமாக அமைந்துள்ள முட்புதரில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அழுகிய நிலையிலோ, எரிக்கப்பட்ட நிலையிலோ இல்லாமல் மண்டை ஓடு இருந்ததால் பல ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சுற்றுப் பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிசியோதெரபி பயில்வதற்காக செய்முறை பயிற்சிக்கு 4 ஆண்டுகளுக்கு முன் எலும்பு கூட்டை தமது தோழியிடம் இருந்து வாங்கி வந்ததாகவும், தற்போது படிப்பு முடிந்த நிலையில் அதனை வீட்டில் வைத்து கொள்ளாமல் அவரது தாய் வெளியே வீசி எரிந்தது விசாரணையில் தெரிய வந்தது. முட்புதரில் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்