பெரியபாளையம் அருகே 72 பயனாளிகளுக்கு வீட்டு மனைபட்டா:அமைச்சர் சா.மு.நாசர் வழங்கல்

பெரியபாளையம் அருகே 72 பயனாளிகளுக்கு வீட்டு மனைபட்டா:அமைச்சர் சா.மு.நாசர் வழங்கல்
X

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி தொகுதி பெரியாளையம் அடுத்த அத்தங்கி காவனூர் அழிஞ்சிவாக்கம் பகுதியில் பட்டா வழங்கல்

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி தொகுதிக்கு உட்பட்ட பெரியாளையம் அடுத்த அத்தங்கி காவனூர்

அழிஞ்சிவாக்கம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 72 ஏழை, எளிய, பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 16 லட்சம் மதிப்பபீட்டில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கன்னிகைபேர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் கலந்துகொண்டு 72 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சா.மு.நாசர்:தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க வழிவகை செய்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின்தான். இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகவும் நம்பர் ஒன் முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் திகழ்கிறார்.அரசுப் பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயணம் சிறப்பு வாய்ந்த திட்டம் என்றார் அவர்.

இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்திய வேலு, ஊராட்சி செயலாளர் வெங்கடாசலம், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ரமேஷ், துணை வட்டாட்சியர் நடராஜன் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!