மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சத்தில் சுகாதார வளாகம்

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில்  ரூ 3 லட்சத்தில் சுகாதார வளாகம்
X

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.

மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் மாதர்பாக்கம் அருகே சென்னையில் இருந்து குடிபெயர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவறைகளை கட்டி கொடுத்த தொண்டு நிறுவனத்திற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் திருவெற்றியூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் இருந்து சூரப்பூண்டி ஊராட்சி வள்ளலார் நகரில் குடிபெயர்ந்து வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிமக்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வந்தனர். சூரப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் வாணிஸ்ரீ பாலசுப்ரமணியன் வேண்டுகோளை ஏற்று, அனுசியா அறிவுறுத்தலின்படி ஜி.எம்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பாக 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!