கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனைச் சாவடியில் போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் ஆய்வு!

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனைச் சாவடியில் போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் ஆய்வு!
X

எளாவூர் சோதனைச் சாவடியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கும்மிடிப்பூண்டி எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் நாளை முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா தாக்கம் குறித்து அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் 50 கொரோனா ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு அங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திடீரென போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai marketing future