கும்மிடிப்பூண்டி: செதில்பாக்கத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

கும்மிடிப்பூண்டி: செதில்பாக்கத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
X

கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கத்தில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 2279 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஷ்வரி குப்பையா தலைமை தாங்கினார்.கிராமநிர்வாக அலுவலர் முத்து முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்வில் உதவி இயக்குனர் கோபிகிருஷ்ணன், கால்நடை மருத்துவர் சசிகலா, கால்நடை ஆய்வாளர்கள் மணிமாறன், ராமமூர்த்தி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பிரேமாவதி, செல்வி, பசுபதி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இந்த சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் 154 பசுக்கள், 275 மாடுகள், 1250 செம்மறி ஆடுகள், 600வெள்ளாடுகள் என 2279 கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், மலட்டு தன்மை நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நோய் தீர்க்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது .

இந்த முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயி விருது சான்றிதழ் செதில்பாக்கத்தை சேர்ந்த விஜயகுமார், பாஷா, செம்பனுக்கு வழங்கப்பட்டது. அவ்வாறே 3பேருக்கு சிறந்த கிடறி கன்று விருது வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!